★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Wednesday, April 12, 2017

சிலுவையை சுமப்பதற்கான தகுதிகள்

வேதம் சொல்லுகிறது, ஒருவன் என் பின்னே வர விரும்பினால்  அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்லூக்கா 9:23

தகுதிகள்:
தகுதி 1: கிறிஸ்துவின் சிந்தை இருக்க வேண்டும் [ பிலி 2:5 ]
தகுதி 2: தன்னை வெறுமையாக்க வேண்டும் [ பிலி 2:7 ]
தகுதி 3: கீழ்ப்படிதல் வேண்டும் [ பிலி 2:8 ]
தகுதி 4: தாழ்மை வேண்டும் [ பிலி 2:8 ]
தகுதி 5: உலகத்தின் ஆசை இச்சைகளை விட வேண்டும் [ கலா 5:24 ]

முன்னுரை:
நாம் ஒரு உலக வேலைக்கு செல்ல வேண்டுமானால் அந்த ஸ்தாபனத்தில் நடத்துகிற நேர்முகத்தேர்வில் வெற்றி பெற வேண்டும், அப்பொழுதுதான் நமக்கு அந்த வேலை கொடுக்கப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்கு முன்னால் நமக்கு சில தகுதிகள் அந்த நிறுவனத்தினரால் நியமிக்கப்படும் அந்த தகுதிகள் ருக்கிறவர்கள் மட்டுமே அந்த வேலைக்கு தகுதியுள்ளவர்களாக மாறுகிறார்கள்இதேபோலத்தான் கிறிஸ்தவ வாழ்க்கையும் அமைகிறது. சிலுவைபாடுகள் என்கிற தகுதிஇல்லாமல் எந்த ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையும் கிடையாது. இந்த தகுதி அதாவது சிலுவையின் பாடுகள் யார் யாரிடம் எல்லாம் இருக்கிறதோ? அவர்கள் மட்டுமே கிறிஸ்து ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிற விருந்துக்கு அனுமதி சீட்டை பெற முடியும் என்பது மெய் ஆகும்.
இந்த விருந்திற்கு முன்பாக நாம் சிலுவையை இந்த உலகத்தில் வாழும் வரை சுமக்கவேண்டும். இது ஒரு லேசான காரியம் இல்லை. இது நம்முடைய வாழ்க்கையில் காண்கிற ஒருவன் கழுத்தில் அணிந்து பயணம் செல்வது போலல்ல, இதற்கென சிலதகுதிகள் உண்டு என்பதை நாம் வேதத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறதுஇப்படிப்பட்ட தகுதிகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் னுஷகுமாரனாய் வந்த போது பெற்றிருந்தார்.
ஆகவேதான் பிதாவானாவர் இயேசுவை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார் என்றுபார்க்கிறோம் [ பிலி 2:9,10,11 ]
இதற்கு காரணமான அதாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயர்வுக்குக் காரணமான தகுதிகளை வேத விளக்கத்துடன் பின்வருமாறு பார்க்கலாம்.

1. முதல் தகுதி: கிறிஸ்துவின் சிந்தை நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும் [பிலி 2:5]
   கிறிஸ்துவின் சிந்தை என்பது தன்னுடைய இஷ்டப்படி செய்யாமல் தன்னை அனுப்பினவரின் சித்தத்தின்படி செய்வதே ஆகும் [ யோவான் 4:34 ]
பாருங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருந்தது, அப்பொழுது அவர் ஜெபம் செய்வதற்கு சென்றார், எப்படியென்றால் ப்பா பிதாவே இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும் ஆகிலும் என்சித்தத்தின் டியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார் [ மாற்கு 14:34-36 ]
இயேசு கிறிஸ்து நினைத்திருந்தால் தனக்கு விரோதமாய் வந்தவர்களை ஒரேநிமிஷத்தில் அழித்திருக்க முடியும் ஆனால் அவரோ தேவதிட்டம் வீணாய் போய் விடக்கூடாது என்பதிலே குறிக்கோளாய் இருந்தார். இப்படிப்பட்ட சிந்தயைத்தான் அப்.பவுலும்கொண்டிருந்தார், பாருங்கள் அவர் தேவனால் சந்திக்கப்பட்ட போது அவர் சொன்ன ஒருபதில் தேவனே நீர் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்.
நாம் எப்படியிருக்கிறோம் கிறிஸ்துவின் சிந்தை நம்மிடம் இருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள் ஏனென்றால் இன்று அனேகர் அதாவது கிறிஸ்துவுக்குள் நாங்கள் வந்துவிட்டோம் ஆகவே இன்னன்ன காரியங்களை தேவனுக்கென்று செய்வோம்.அதுமட்டுமல்லாமல் தேவனுக்காக மரிக்க வேண்டுமானலும் அதற்கு தயாராகஇருக்கிறேன் என்று பலவிதமான பொருத்தனைகளை செய்வதுண்டு. நாட்கள் செல்லசெல்ல அல்லது உலகத்தின் பாடுகள் நம்மை நெருக்கும் போது எல்லாவற்றையும் றந்துவிட்டு மறுபடியும் பழைய வாழ்க்கைக்கு செல்லுகிற விசுவாசிகளையும் ழியக்காரர்களையும் நாம் இன்றைய நாட்களில் அதிகம் பார்க்க முடிகிறது. இதற்குக்காரணம் எல்லாவற்றையும் தேவன் திட்டம் செய்வதற்குப் பதிலாக இவர்களே எல்லாதிட்டங்களையும் பட்டியல் இடிவதே ஆகும்.
 இனிமேலாவது சிலுவையை சுமக்க வேண்டுமானால் சிலுவையின் சொந்தக்காரராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தையை அணிந்து கொள்வோம். அப்பொழுது மாத்திரமே சிலுவையில் இருக்கிற இயேசுவை நம்மால் பார்க்க முடியும். ஆகவே மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல் கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனபூர்வமாகத் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்எபேசியர் 6:6.

2. இரண்டாது தகுதி: நம்மை வெறுமையாக்க வேண்டும் [ பிலி 2:7 ]
பெறுமையாக்குதல் என்பது தன்னுடைய மதிப்பு பூஜ்ஜியம் என்பது காண்பிப்பதே ஆகும்.பாருங்கள் வேதம் சொல்லுகிறது,
பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது என்றும் [ 1கொரி 10:26 ] லும்
வானங்கள் கர்த்தருடையது பூமியும் கர்த்தருடையது என்று சங்கீதம் 89:11 லும்கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது. ஆனால் அவரோ தம்முடைய ஜனங்கள் குறைவுடனும், பாவத்தின்நோயுடனும் ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுவதைப் பார்த்த தேவன் தம்மையே வெறுமையாக்கி இறங்கி வந்தார் என்று சங்கீதம் மற்றும் பிலிப்பியர் அதிகாரத்தை நாம்படிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது.
இத்தகைய காரியத்தை நாம் பலவிதமான பாத்திரங்களில் பார்க்க முடிகிறது.எப்படியென்றால் தாவீது ராஜாவைப் பாருங்கள் அவர் இஸ்ரவேல் மற்றும் யூதருக்குராஜாவாய் இருந்த போதிலும் அவர் சொன்ன ஒரு காரியம்,
இப்படி மனபூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம் என்ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது உமது கரத்திலே வாங்கிஉமக்குக் கொடுத்தோம் [ னாளாகமம் 29:14 ]
அடுத்ததாக, அப்.பவுல் தான் யூதமார்க்கத்தில் ஒரு பெரிய பதவியில் எல்லாரும்மதிக்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த அவர் தேவனால் சந்திக்கப்படுகிறார்.இதோ எல்லாவற்றிற்கு தன்னை தலைவனாக காண்பிக்க விரும்பிய பவுல் சொன்ன ஒருகாரியம், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன் என்று பிலிப்பியர் 3:7ல் தம்முடைய வெறுமையை அப்.பவுல் வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம்.
மேலும், அப்.யோவான் அதாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அன்பாய் இருந்தசீஷன் இந்த அப்போஸ்தலராகிய யோவான் ஆவார். இப்படிப்பட்ட செல்வாக்கைப் பெற்றிருந்த யோவான் சொல்லும் பதிலைப் பாருங்கள்.
அவர் [இயேசு கிறிஸ்து] பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் [ யோவான் 3:30 ]
நாமும் இவர்களைப் போல வெறுமையாய் இருக்கிறோமோ? அல்லது எனக்கு அந்த வரம்இருக்கிறது அல்லது என்னிடம் தேவ வல்லமை இருக்கிறது நான் தொட்டால் எல்லாரும்விழுகிறார்கள் அல்லது நான் ஜெபித்தால் எல்லாரும் சொஸ்தமாகிறார்கள் என்றுசொல்லிக் கொண்டிருக்கிறோமா? யோசித்துப் பாருங்கள். நாம் நம்மை வெறுமையாக்கினால் மாத்திரமே தேவனால் இந்த பாத்திரத்தில் ருசியுள்ள திராட்சரசத்தை நிரப்ப முடியும் என்பதை மறந்து விடாதீர்கள். வேதம் சொல்லுகிறதுஆகையால் நான் என்னை அருவருத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்யோபு 42:6
3. மூன்றாவது தகுதி: கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் [ பிலி 2:8 ]
வேதம் சொல்லுகிறது, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகக் காணப்பட்டார் [பிலி 2:8]
இந்த வசனத்தின் உட்பொருளைக் கவனித்துப் பார்ப்பீர்களானால் ஒரு காரியம் நமக்குதெரிய வரும் அது என்ன வென்றால் அவர் இந்த உலகத்தில் மனுஷகுமாரனாய் வந்ததுமுதல் பிதாவுக்குக் கீழ்ப்படிந்தவராகக் காணப்பட்டார். ஆகவேதான் அவர் இப்படியாக சொல்லுகிறார்.
நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை நான் கேட்கிறப்படியே நியாயந்தீர்க்கிறேன்.எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையேநான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. [ யோவான் 5:30 ]
இன்று அனேகருடைய தீர்ப்பு நீதியாய் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாத காரணத்தினால்தான் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1.பாருங்கள்,சவுல் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதினால் அவன் பாவத்திற்குள்ளாக சாத்தானால் அனுமதிக்கப்பட்டான் [ 1சாமு 15 ஆம் அதிகாரம் ]
2.அடுத்ததாக, உசியா ராஜா தேவனுக்குக் கீழ்ப்படியாததினால் அவன் தன்னுடைய நெற்றியில் வெண்குஷ்டத்தை பெற்றுக் கொண்டு ராஜாவின் ஸ்தானத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.
3.யோனா தேவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாத காரணத்தினால் மீனின் வயிற்றிற்குள் ராப்பகல் மூன்று நாள் இருந்தான் [ யோனா 1:17 ]
இப்படியாக அனேக உதாரணங்களை நாம் பார்க்க முடிகிறது, நாம் எப்படியிருக்கிறோம் ம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும்கீழ்ப்படிந்து வாழ்கிறோமா? அல்லது சவுலைப் போல சாக்கு போக்கு சொல்லிக் கொண்டுஇருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள், வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் லிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? – 1சாமு 15:22 அதுமட்டுமல்லாமல், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது என்று,அப்போஸ்தலர் 5:29 லும், நாம் கீழ்ப்படிதல் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
4.     நான்காவது தகுதி: தாழ்மை ஒவ்வொருவருக்கும் வேண்டும் [ பிலி 2:8 ] வேதம் சொல்லுகிறது, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடைசி வரைக்கும் தம்மை தாழ்த்தினார்என்று பிலி 2:8ல் பார்க்கிறோம்.
மத்தேயு முதல் யோவான் வரை வாசிக்கும் போது தேவனுடைய பிறப்பு முதல்அவருடைய மரணம் வரை இந்த தாழ்மையை நாம் பார்க்க முடிகிறது. எல்லாவற்றிற்கும் சொந்தக்காரர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்து தங்குவதை நம்மால் வேதத்தில்வாசிக்க முடிகிறது.
பாருங்கள், தனக்கு விரோதமாய் எத்தனை பொய்யான குற்றச்சாட்டுகளை சொன்னபோதிலும் அவர் ஒன்றும் பேசாமல் தாழ்மையாக இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது.பாருங்கள் சங்கீதக்காரன் எழுதும் போது அவர் சொன்ன ஒரு காரியம் அவர் [ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ] வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும் படி தம்மைத் தாழ்த்துகிறார் [சங் 113:6] , நம்மை உண்டாக்கின தேவனிடம் வ்வளவு தாழ்மையிருக்கும் போது நம்மிடம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
தாழ்மை குணம் என்றால் என்ன?
தன்னை எந்த ஒரு இடத்திலும் அதாவது நான் என்கிற வார்த்தையை எந்த ஒருஇடத்திலும் பயன் படுத்தாமல் இருப்பதே ஆகும்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எத்தனை விதமான அற்புதங்களையும் செய்த போதிலும் அவர் எல்லாரிடத்திலும் சொன்ன ஒரு வார்த்தை என் பெயரை எங்கும்சொல்ல வேண்டாம் என்பதாகும். பிதாவின் நாமம் மாத்திரம் மகிமைப்படுமபடியாகஎல்லாவற்றையும் செய்தார். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள் ங்களுடைய கூட்டத்தில் ஒரு அற்புதம் நடந்து விட்டால் உடனே தன்னுடைய பெயரைமிகவும் விளம்பரப்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது, இதற்குக் காரணம் ன்னவென்றால் இவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிய வேண்டிய விதத்தில் அறியாமல் ருப்பதே காரணம் ஆகும்.
வேதம் சொல்லுகிறது, கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப் படுங்கள் அப்பொழுது அவர்உங்களை உயர்த்துவார்யாக்கோபு 4:10
5. ஐந்தாவது தகுதி: உலகத்தின் ஆசை இச்சைகளை விட வேண்டும் [ கலா 5:24 ] 
   வேதம் சொல்லுகிறது, கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் லுவையில் அறைந்திருக்கிறார்கள்கலா 5:24 இத்தகைய காரியத்தை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனுஷகுமாரனாய்வந்த போது தன்னுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்துவதை நாம் பார்க்க முடிகிறது,எப்படியென்றால் எல்லா சோதனைகளிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜெயம்எடுத்துக் கொண்டு வரும் போது பிசாசானவன் அவரை எப்படியாவது தன் வழிக்குக்கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்கிறான், பாருங்கள் மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய்உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக்காண்பித்து, நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால்இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசுஅப்பாலே போ சாத்தானே என்று சொல்லி அவனைக் கடிந்து கொள்வதை நாம் மத்தேயு4:8 லிருந்து 10 வரை வாசிக்கும் போது மேலே சொல்லப்பட்ட வசனத்தின் படி இயேசுகிறிஸ்து தம்முடைய வழ்க்கையை அமைத்திருந்ததை நாம் வேதத்தை வாசித்து தெரிந்துகொள்ள முடிகிறது.
இன்று நம்மால் ஏன் ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழமுடியவில்லையென்றால் நம்மிடத்தில் இருக்கிற உலக ஆசையே, இந்த ஆசைதான்நம்மை பாவத்திற்குள்ளாக நடத்தி நம்மையும் தேவனையும் பிரிக்கிற ஒரு சுவராகமாறுகிறது என்று யாக்கோபு 1ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
ஆகவேதான் அப்.பவுல் இந்த உலக ஆசை தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாதுஎன்பதற்காகத்தான் அவர் தன்னை சிலுவையில் அறையுண்டவராக உலகத்திற்குக் காண்பித்துக் கொடுக்கிறார். எனவே தான் அவருடைய சுவிசேஷ பணியில் இந்தஉலகத்தால் அதாவது பிசாசினால் ஒருபோதும் ஜெயம் எடுக்க முடியவில்லை என்பதைநாம் ரோமர் அதிகாரத்தையும் கலாத்தியரையும் வாசிக்கும் போது இத்தகையவிஷயத்தை அறிந்து கொள்கிறோம்.
வேதம் சொல்லுகிறது, உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் ருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை
ஏனெனில் மாம்சத்தின் இச்சையும் கண்களின் இச்சையும் ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகள் ல்லாம் உலகத்தினால் ண்டானவைகள் [1யோவான் 2:15,16] எனக்குப் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே நாம் இவ்வளவு காலம் இந்த உலகத்தைசுமந்து வந்தது போதும் இனிவருகிற நாட்களில் பரலோகத்திற்கு நம்மை கொண்டுசெல்லுகிற சிலுவை பயணத்தை மேற்கொள்வோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் தம்முடைய சிலுவைத் ழும்புகளால் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment