★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Wednesday, January 1, 2020

2020 - ம் ஆண்டு வாக்குத்தத்த செய்தி

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் (மீகா 7:15)

     அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் அருமையானவர்களே! புதிய  நாட்களில் பல எதிர்பார்ப்போடு காணப்படுகிற நமக்கு தேவன் உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன் என்ற வாக்கு பண்ணுகிறார்.நடப்பதற்க்கு  அரிதானகாரியங்களைத் தான் நாம் அதிசயம் என்கிறோம். ஆம் , உங்கள் வாழ்க்கையில் நடக்கவே இயலாது என்ற காரியத்தை தேவன் செய்யப்போகிறார். என் குடும்பத்தில் இது நடக்கவே நடக்காது என்கிற காரியத்தை தேவன் செய்யப்போகிறார். உங்கள் தொழிலிலும் நிச்சயம்  அதிசயத்தை காணச் செய்யப்போகிறார். நான் வாழ்க்கையில் தேவனுடைய அற்புதத்தை பெற என்ன செய்ய வேண்டும் என கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

1.கார்மேலின் நடுவிலே வாசமாயிருக்கிறவர்களுக்கு அதிசயங்களைக் காணப்பண்ணுவார். {மீகா 7:14}
     கார்மேல் என்பதற்கு கனித்தோட்டம் என்று பொருள்படும். பாலஸ்தீனா நாட்டில் அமைந்துள்ள இந்த மலை நாடு செழிப்பான தோட்டங்களால் நிறைந்திருந்ததுதேவனுடைய சபையும் ஒரு தோட்டமாகும். அது கனிகள் நிறைந்த தோட்டமாகும். இந்த தோட்டம் தேவனுடைய கிருபையாகிய நீரூற்றுகள் உள்ளதும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவாகிய தென்றல் காற்று வீசும் இடமாகும். ஆகையால் இங்குள்ள கனிகள் வாசனையுள்ளதும் ருசியுள்ளதும் ஆரோக்கியமுள்ளதும், ஜீவனைக்கொடுக்கக் கூடியதுமாகும். ஆகவே இந்த கனித் தோட்டமாகிய சபையில் உலகத்திலிருந்து வேறுபட்டு வந்து வாசம் பண்ணுவது வாழ்க்கையில் அதிசயங்களை காண ஏதுவானது ஆகும். பாருங்கள் ! இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனு தினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்{அப் 2:47} என்று இவ்வசனம் கூறுகிறது. இது நாம் சபையில் வாசம் பண்ணுவதின் முக்கியம் அறிந்து கர்த்தராகவேநம்மை சபைக்குள் கொண்டு வந்ததைக் கூறுகிறது.  
       நாம் சபைக்குள் வந்தால் மாத்திரம் போதாது. நாம் சபைக்குள்ளேயே வாசம் பண்ண வேண்டுமாம். ஆதிசபையார் எவ்விதம் சபையோடும் இணைந்திருந்தனர்? ஆதி சபையார் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும் அப்பம் பிட்குதலிலும் ஜெபம் பண்ணுவதிலும் உறுதியாய் தரித்திருந்தனர். {அப் 2:42} சபையோடு அவர்கள் பிணைக்கப்பட்டிருந்தனர். நாளுக்கொரு சபை, நாளுக்கொரு கூட்டம் என்று அலையவில்லை ஆகையால், ஆதி சபை தேவனுடைய அதிசயங்களை கண்டது. சபை கூடுதலை முக்கியமாய் எண்ணி, சபையில் நடைபெறும் கூட்டங்களிலே உண்மையாய் பங்கு பெற்று . சபையின் ஊழியங்களோடு இணைந்து ஊழியம்செய்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு உண்மையாயிருப்போமானால், தேவன் நம் வாழ்க்கையில் நிச்சயம் அதிசயங்களைக் காணச் செய்வார்.

2. தேவனுடய உரிமைச் சொத்தாய் இருப்பவர்களுக்கு அதிசயங்களைக் காணப்பண்ணுவார் {மீகா 7:14}
        தேவன் தம்முடையவர்களை மிகவும் நேசிக்கிறார். தம்முடையவர்களை தம்முடையவர்களாகவே
இருக்க எதிர்பார்க்கிறார். இந்நாட்களில் விசுவாச துரோகம் எங்கும் தலை விரித்து ஆடும் நிலை உள்ளது இப்படிபட்ட நிலையில் நாம் தேவனுக்கு உண்மையாயிருக்க வேண்டியது மிக அவசியமாகும். இஸ்ரவேல் தேசம் பாவத்தில் மூழ்கியிருந்த போது கர்த்தருக்காக வைராக்கியமாக இருந்த தேவனுடய மனிதனாகிய எலியாவின் வாழ்க்கையில் தேவன் செய்த அதிசயமான காரியத்தைப் பாருங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையன்றி, வேறெந்த தெய்வங்களுக்கு கையெடுக்காமலும், பணத்திற்க்காக, உலக ஆசை இச்சைகளுக்காக, கர்த்தரை விட்டு பின்வாங்காமல் எலியாவைப் போன்று கர்த்தருக்கு வைராக்கியமாய் இருப்போமானால், அவருடைய உரிமைச் சொத்தாய் மாத்திரம் இருப்போமானால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலே தேவன் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்.

3.தேவனுடைய மேய்ச்சலை மேய்கிற ஜனத்திற்கு அதிசயங்களைக் காணப்பண்ணுவார் {மீகா 7:14}

     கர்த்தர் நம்மை மேய்க்கிறவர்.புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறவர். தேவனுடைய சத்தியமே நமது மேய்ச்சலாகும். ஆகவே நாம் தேவனுடய சத்திய வசனத்தை வாசிக்க வேண்டும். ஆடுகள் மேய்ந்த பின் தனியே அமர்ந்து மேய்ந்ததை அசைபோடும்
        அது போல நாம் வாசித்த சத்தியவசனங்களை தியானம் செய்ய வேண்டும் , சங்கீ 1:2,3- கூறுவதை பாருங்கள். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து. இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிரா மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் , ஆம் , நாம் வேதத்தை வாசித்து தியானிக்கும் போது நடப்பதென்ன? நமக்குள் தேவனுடய வார்த்தை, தேவன் மேலுள்ள விசுவாசத்தை அளவில்லாமல் பெருகச் செய்யும். அப்படி பெருகும் விசுவாசம் நமது வாழ்க்கையில் தேவனுடய  அதிசயங்களைக் காணச் செய்யும். தேவனுடைய பிள்ளைகளேகர்த்தருடைய சரீரமாகிய சபையில் ஐக்கியமாயிருங்கள். தேவன் ஒருவருக்கே உரிய உரிமை சொத்தாய் உங்களை ஒப்படையுங்கள்.தேவனுடய வசனத்தை இரவும் பகலும் வாசித்து தியானியுங்கள். உங்கள் வாழ்க்கையில் தேவன் அதிசயங்களைக்காணப் பண்ணுவார்.

No comments:

Post a Comment