![]() |
வசனம்
அப்போஸ்தலர்
8-39
அவர்கள்
தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக்
கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே
போனான்.
யோவான்
12-21
அவர்கள்
கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து ஐயா, இயேசுவைக்
காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
2 கொருந்தியர் 5-17
இப்படியிருக்க,
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள்
ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
யோபு
1-20,21
அப்பொழுது
யோபு எழுந்திருந்து தன் சால்வையைக் கிழித்து தன் தலையைச் சிரைத்து, தரையிலே
விழுந்து பணிந்து
நிர்வாணியாய்
என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன், நிர்வாணியாய் அவ்விடத்துக்குத்
திரும்புவேன் கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்துக்கு
ஸ்தோத்திரம் என்றான்.
1 கொருந்தியர் 13-13
இப்பொழுது
விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது, இவைகளில் அன்பே
பெரியது.
No comments:
Post a Comment